கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாகிரகத்தின் போது ஏற்பட்ட அமைதியின்மையின் போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கஸ்ஸப தேரர் தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சம்பத் இந்திக குமார தெரிவித்துள்ளதாவது, ஆரம்ப பரிசோதனைக்குப் பின்னர் மேலதிக சிகிச்சை தேவையில்லை என தெரிவித்து தேசிய வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார் என்பதாகும்.
நேற்று மாலை 8.30 மணியளவில் இலங்கை தேசிய வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவுக்கு சிகிச்சைக்காக வந்த பலாங்கொடை கஸ்ஸப தேரர் சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மேலதிக சிகிச்சை தேவையில்லை என தெரிவித்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளார் என வைத்தியசாலை பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.







