அமெரிக்காவை தாக்கிய ஹெலன் சூறாவளி காரணமாக 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

சூறாவளியில் சிக்குண்ட பலர் காயமடைந்துள்ளனர்.

அத்துடன் பலர் காணாமல் போயுள்ளதாகச் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹெலன் சூறாவளி காரணமாக புளோரிடா, வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, ஜோர்ஜியா ஆகிய பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த பகுதிகளில் வசித்து வரும் சுமார் 20 இலட்சம் பேர்வரை மின்சார வசதியின்றி பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here