13வது வடக்கின் நீலங்களின் சமரில் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணி 05 இலக்குகளால் வெற்றி பெற்றுள்ளது. வடக்கின் நீலங்களின் சமர் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி இந்துக்கல்லூரி மற்றும் கிளிநொச்சி மத்திய கல்லூரி அணிகள் மோதிய 13வது வடக்கின் நீலங்களின் சமரில் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணி ஐந்து இலக்குகளால் வெற்றி பெற்றது.
27ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாவது நாள் இரண்டாவது இனிங்சை ஆரம்பித்த கிளிநொச்சி மத்திய கல்லூரி அணி 66ஓட்டங்களுக்கு அனைத்து இலக்குகளையும் இழந்திருந்தனர்.94 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணி ஐந்து இலக்குகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இதுவரை நடைபெற்ற 13வடக்கின் நீலங்களின் சமரில் ஐந்து போட்டிகளில் இந்துக்கல்லூரி அணியும் மூன்று போட்டிகளில் மத்திய கல்லூரி அணியும் வெற்றி பெற்றன ஐந்து போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்திருக்கிறது.13வது வடக்கின் நீலங்களின் சமரில்
சிறந்த துடுப்பாட்ட வீரராக இந்துக்கல்லூரி வீரர் K.கரிசாந்
சிறந்த பந்துவீச்சாளராக மத்திய கல்லூரி வீரர் -G-கெளசிகன்
போட்டியின் சிறந்த ஆட்டநாயகனாக இந்துக்கல்லூரி அணி வீரர் T-கிருசாந்தன்
போட்டியின் சகலதுறை வீரராக கிளிநொச்சி மத்திய கல்லூரி அணி வீரர் G-கெளசிகன்
போட்டியின் சிறந்த களத்தடுப்பாளராக மத்திய கல்லூரி வீரர் S-வேங்கைமாறன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.








