யாழ்ப்பாணம் நெடுந்தீவுக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 16 இந்திய மீனவர்களும் அடுத்த மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த 16 தமிழக மீனவர்களும் கடந்த புதன்கிழமை இரவு நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைதான மீனவர்கள்  விசாரணைகளின் பின்னர் வியாழக்கிழமை (24.10.2024) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிபதி நளினி சுபாஸ்கரன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். இதன்போதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here