காலி  வலஹந்துவ பகுதியைச் சேர்ந்த சேனுக தேஷான் என்ற மாணவன் மார்ச் 18ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.

காலியில் தனியார் உயர்கல்வி நிறுவனமொன்றில் பாடநெறி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்ற  மாணவனை  15 நாட்களாக காணவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தனது 21 வயது காதலியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக காலி ஜங்கள் கடற்கரைக்கு சென்றுள்ளதாக  பின்னர் தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாங்கள் இருவரும் கடற்கரையில் இருந்து திரும்புவதற்கு தயாராகிக் கொண்டிருந்த வேளையில் திடீரென ஏற்பட்ட அலையினால் இருவரும் கடலில் அடித்துச் செல்லப்பட்டதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

அதில், தான் உயிர் பிழைத்ததாகவும் ஆனால் தனது காதலன் நீரில் மூழ்கியதாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் பொலிஸில் பல தடவைகள் முறைப்பாடு செய்துள்ள சேனுகவின் உறவினர்களுக்கு, காதலி தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவ்வித குற்றவியல் குற்றங்கள் தொடர்பிலும் பதிவாகவில்லை எனவும் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஹபராதுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here