18வது ஐ.பி.எல். தொடரின் 64வது போட்டி குஜராத் ரைரன்ஸ் மற்றும் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது.
அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்றிரவு உள்ளூர் நேரப்படி 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் குஜராத் ரைரன்ஸ் அணி 12 போட்டிகளில் விளையாடி 9 வெற்றி, 3 தோல்விகளுடன் 18 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலாம் இடத்தில் உள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 12 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 7 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.
இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் குஜராத் ரைரன்ஸ் அணி பிளே ஒவ் சுற்றுக்கு தெரிவாகியுள்ளது.
இருந்தபோதிலும் தன்னுடைய புள்ளிபட்டியல் முதலிடத்தை தக்கவைத்து கொள்வதற்காக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்க்கு சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
7ம் இடத்தில் உள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முன்னேறுவதற்காக குஜராத் ரைரன்ஸ் அணிக்கு எதிராக முழுமையான முயற்சியை எடுப்பார்கள் என நம்பப்படுகிறது.
குஜராத் ரைரன்ஸ் அணியை பொறுத்தவரையில் துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் அதிரடிகாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் குஜராத் ரைரன்ஸ் அணியை வீழ்த்துவது என்பது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு போராட்டமாக அமையும் என்பதில் ஐயம் இல்லை.








