வத்தளை, மாபோல பகுதியில் 18 கிலோவிற்கும் அதிகமான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவு அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

சந்தேக நபரிடமிருந்து 9 கிலோ 229 கிராம் ஐஸ் போதைப்பொருள், 9 கிலோ 264 கிராம் ஹெரோயின், போதைப்பொருளை அளவிட  பயன்படுத்திய தராசு மற்றும் கையடக்க தொலைபேசி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் வத்தளை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here