அம்பாறை மாவட்டம் 2025ஆம் ஆண்டுக்கான கழகங்களுக்கிடையிலான பெரு விளையாட்டுக்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

இவ் பெரு விளையாட்டுக்களில் கடற்கரை கபடி (Beach Kabaddi ) மற்றும் உதை பந்தாட்டம் (Football) விளையாட்டுகளில் 11ம் கிராமம் பெண் அணியினர் முதலாம் இடத்தை பெற்றதோடு மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கிரிக்கெட் மற்றும் கடற்கரை வலைப்பந்தாட்டம் ( Beach Volleyball ) ஆகிய விளையாட்டுகளில் இரண்டாம் இடத்தையும் பெற்று நாவிதன்வெளி பிரதேசத்திற்கும் 11ம் கிராமத்திற்கும் பெருமை தேடி தந்துள்ளனர்.

அத்தோடு வருகின்ற 17 மற்றும் 18 ம் திகதிகளில் நடைபெறவிருக்கின்ற கபடி (Kabaddi) மற்றும் எல்லே (Elle) போட்டிகளில் சிறப்பான முறையில் விளையாடி தங்களுக்கான வெற்றிச் சாதனையினை நிலைநாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த 2024ஆம் ஆண்டு கிரிக்கெட், எல்லே, கடற்கரை வலைப்பந்தாட்டம், கடற்கரை கபடி போன்ற 4 போட்டிகளில் சம்பியனாகவும் கபடி போட்டியில் 2ஆம் இடத்தையும் பெற்றிருப்பது  குறிப்பிடத்தக்கது.

[மட்டக்களப்பு நிருபர் – சதானந்தம் ஸோபிதன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here