2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி வருமானத்தை 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் வரை உயர்த்தும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் பிரதி பொது முகாமையாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
6ஆவது ஆசிய தேயிலை கூட்டமைப்பு உச்சிமாநாடு மற்றும் ஆசியத் தேயிலை கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இலங்கை ஏற்றுக்கொண்டதுடன் இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.
அங்கு பேசிய பிரதி பொது முகாமையாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்ததாவது, நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தியில் 75 சதவீத பங்களிப்பைச் சிறு தேயிலைத் தோட்டங்களே வழங்குகின்றன என்றும், இந்தத் துறை தொடர்ந்தும் வலுப்பெற்றால் வருமான அதிகரிப்பு இலக்கு எட்டப்படும் என்றும் குறிப்பிடப்பட்டது.








