வெலிமடை – பொரலந்த – கண்டேபுஹுல்பொல பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் திருமணமான தம்பதியினர் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெலிமடை பிரதேச செயலகப் பிரிவில் நேற்று (17) மாலை பெய்த கனமழையால் இந்த துயரச் சம்பவம் ஏற்பட்டது.
சம்பவத்துக்குப் பிறகு அப்பகுதி மக்கள் இரவு முழுவதும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதன்போது பெண்ணின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
உயிரிழந்தவர் 32 வயதுடையவர் எனவும், காணாமல் போன அவரது கணவர் 37 வயதுடையவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
தற்போது காணாமல் போன நபரைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








