நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த முதலாம் திகதி முதல் நேற்று(04) மாலை வரையான காலப்பகுதியில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
மாத்தறை மாவட்டத்திலேயே அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
மேலும் 13 பேர் காயமடைந்துள்ள நிலையில், ஒருவர் காணாமல் போயுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மற்றும் வௌ்ள அனர்த்தங்களில் சிக்கி 53,289 குடும்பங்களை சேர்ந்த 202,651 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.