பொருட்களை இறக்குமதி செய்வதாக தெரிவித்து  டெலிகிராஃபிக் டிரான்ஸ்பர் (TT) மூலம் வெளிநாட்டு கணக்குகளுக்கு ரூ. 24.8 பில்லியன் பெறுமதியான அமெரிக்க டொலர்களை மாற்றியதாக குற்றம்சாட்டப்பட்ட சந்தேக நபரை கொழும்பு நீதவான் நீதிமன்றம் அக்டோபர் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

பொருட்களை இறக்குமதி செய்வதாகக் தெரிவித்து மின்னணு பரிமாற்றங்கள் மூலம் ரூ. 24.85 பில்லியன் பெறுமதியான டொலர் இருப்பை நாட்டை விட்டு வெளியே அனுப்ப உதவியதாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

நாட்டில் பதிவு செய்யப்பட்ட 89 நிறுவனங்கள் பொருட்களை இறக்குமதி செய்வதாகக் தெரிவித்து மின்னணு பரிமாற்றங்கள் மூலம் டொலர் இருப்பை நாட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளதாக பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இதற்கமைய, நேற்று (22) மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த நிறுவனங்களில் 05 நிறுவனங்கள் மூலம் போலியாக ரூ.24.85 பில்லியன் பெறுமதியான டொலர் இருப்பை நாட்டை விட்டு வெளியே அனுப்ப உதவியதாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் வெல்லம்பிட்டி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் 35 வயதுடைய வெல்லவீதி, கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

2024 டிசம்பர் முதல் 2025 நவம்பர் வரையிலான காலப்பகுதியில் எந்தவொரு பொருட்களையும் இறக்குமதி செய்யாது டெலிகிராஃபிக் (TT) பரிமாற்ற முறை மூலம் குறித்த டொலர்கள் வெளிநாட்டு கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here