February 7, 2026
மன்னார் முசலியில் இளைஞர் விவசாய தொழில் முனைவோர் கிராமம் அங்குரார்ப்பணம்..!
உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

மன்னார் முசலியில் இளைஞர் விவசாய தொழில் முனைவோர் கிராமம் அங்குரார்ப்பணம்..!

Jul 13, 2024
மன்னார் மாவட்டம் முசலி பிரதேசத்தில் இளைஞர் விவசாய தொழில் முனைவோர் கிராமம் இராஜாங்க அமைச்சர் கே. கே. மஸ்தானினால் இன்று சனிக்கிழமை (13) காலை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வின் ஆலோசனைக்கு அமைவாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் கருத் திட்டத்திற்கு அமைவாக இராஜாங்க அமைச்சர் கே. கே. மஸ்தானினால்    அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாலைக்குளி கிராமத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.குறித்த நிகழ்வில் தொழில் முனைவோருக்கான விவசாய உபகரணங்கள், கால்நடை வளர்ப்புக்கான பொருட்கள் மற்றும் கோழிக்குஞ்சுகள் என்பன வழங்கி வைக்கப்பட்டதோடு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் விவசாய திணைக்கள அதிகாரிகள்,திணைக்கள தலைவர்கள்,  கிராம சேவையாளர் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *