செனகலின் வடமேற்கு பகுதியில் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளை ஏற்றிச் சென்ற சிறிய படகு ஒன்று மூழ்கியதில் குறைந்தது 34 பேர் உயிரிழந்துள்ளதாக செனகல் செய்தி நிறுவனம் (APS) தெரிவித்துள்ளது.
இதேவேளை ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாக செனகல் உள்துறை அமைச்சு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
செய்தி நிறுவனத்தின் உயிரிழப்பு எண்ணிக்கையை மனித உரிமைகள் மற்றும் நட்புக்கான நடவடிக்கை (ADHA) அமைப்பு வெளியிட்ட அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
டக்காருக்கும் வடக்கு நகரமான செயிண்ட்-லூயிஸுக்கும் இடையில் உள்ள கெபெமர் மாவட்டத்தில் லூம்பூல் மணல் குன்றுகளுக்கு அப்பால் சனிக்கிழமை பிரோக் வகை தட்டையான அடிப்பகுதி கொண்ட படகு கவிழ்ந்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவித்தன.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அதே மாவட்டத்தில் உள்ள லியோனா மற்றும் தியெப்பே மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என Le Soleil செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
மேற்கு ஆபிரிக்காவிலிருந்து ஸ்பெயினின் கனேரி தீவுகளை அடைய முயன்று கடந்த சில ஆண்டுகளில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் 635 பேர் உயிரிழந்துள்ளதாக புலம்பெயர்ந்தோர் உரிமைகள் குழுவான Walking Borders தெரிவித்துள்ளது.
எல் ஹியரோவில் புலம்பெயர்ந்தோர் படகுகள் வருகை அதிகரித்ததை அடுத்து, அங்குள்ள ஸ்பானிஷ் அதிகாரிகள் சனிக்கிழமை அவசர நிலையை அறிவித்தனர்.
நவம்பர் மாதம் தொடங்கியதிலிருந்து சுமார் 30 படகுகளில் 3,300 க்கும் மேற்பட்டோர் வந்து சேர்ந்துள்ளதாக எல் ஹியரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








