தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRI), பதுளை, கேகாலை, நுவரெலியா, கண்டி மற்றும் இரத்தினபுரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பகுதிகளுக்கு அம்பர் 2 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (நவம்பர் 9) மாலை 4:00 மணி முதல் நாளை (நவம்பர் 10) மாலை 4:00 மணி வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் நிலை அம்பர் எச்சரிக்கைகள் (மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு) குறிப்பாக பின்வரும் பகுதிகளுக்கு பொருந்தும்:
பதுளை மாவட்டம்: பசறை
– கேகாலை மாவட்டம்: தெரணியகலை
– நுவரெலியா மாவட்டம்: நீல்தண்டாஹின்ன, வலப்பனை மற்றும் அம்பகமுவ கோரளை
-கண்டி மாவட்டம்: உடுதும்பரை
– இரத்தினபுரி மாவட்டம்: எஹெலியகொடை, எலபாத்த, அயகம மற்றும் வெலிகேபொல
மேலும், நிலை 1 மஞ்சள் எச்சரிக்கைகள் பல ஏனைய பகுதிகளுக்கும் விடுக்கப்பட்டுள்ளன:
– பதுளை: மீகஹகிவுல
– கொழும்பு: பாதுக்கை மற்றும் சீதாவக்கை
– காலி: தவலம, எல்பிட்டிய மற்றும் கரந்தெனிய
– களுத்துறை: வலல்லாவிட்டை, பாலிந்தநுவரை, இங்கிரிய மற்றும் புலத்சிங்கள
– கண்டி: உடுநுவரை, தும்பனே, மினிபே மற்றும் யட்டிநுவரை
– கேகாலை: அரநாயக்க, யட்டியந்தோட்டை, புலத்கொஹுபிட்டிய, மாவனல்லை, ருவன்வெல்லை, கேகாலை மற்றும் வரகாபொல
– நுவரெலியா: மாத்துரட்டை, கொத்மலை மேற்கு, கொத்மலை கிழக்கு மற்றும் ஹங்குரங்கெத்தை
– மொனராகலை: வெல்லவாய
– இரத்தினபுரி: கொடகவெலை, கொலொன்ன, பலாங்கொடை மற்றும் இரத்தினபுரி








