மத்திய மலைநாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று பிற்பகல் முதல் பெய்துவரும் கடும் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஹட்டன் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதன் காரணமாக வாகனங்களை செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதோடு பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இதேவேளை ஹட்டன் நுவரெலியா பிரதான பாதையின் குடாகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் அவ்வீதியூடான போக்குவரத்தும் சில மணித்தியாலங்கள் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








