Tamil News Channel

Blog Post

Tamil News Channel > Top > 78வது வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில்

78வது வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில்

இந்நாட்டின் 78வது வரவு செலவுத் திட்டமான 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நேற்று நண்பகல் 12.00 மணிக்கு நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படடது.

2024 ஆம் ஆண்டிற்கான மதிப்பிடப்பட்ட அரசாங்கச் செலவு 7,326 பில்லியன் ரூபாவாகும்.

தொடர்ச்சியான செலவுகள் அல்லது மானியங்கள் மற்றும் சம்பளம் போன்ற செலவுகளுக்காக 5,334 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்படவுள்ளது.

மூலதனச் செலவு அல்லது புதிய திட்டங்கள் அல்லது ஏற்கனவே உள்ள திட்டங்களுக்கான செலவு 1,225 பில்லியன் ரூபாய்கள் எனக் கூறப்படுகிறது.

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் மாதம் 14ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை 7 நாட்களுக்கு நடைபெறும்.

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறும்.

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழுநிலை விவாதம் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 13ஆம் திகதி வரை 19 நாட்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வாக்கெடுப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் 13ஆம் திகதி மாலை 06:00 மணிக்கு நடைபெறும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *