காலி – மஹாபாகே பிரதேசத்தில்  இளம் தாய் ஒருவர் தனது 9 மாத குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த  கொடூர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குழந்தையை காணவில்லை என தந்தை பொலிஸில் நிலையத்தில் நேற்றைய தினம்(28) முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் அவர் வசித்த வீட்டின் அருகே உள்ள கிணற்றிலலிருந்து குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் நடத்திய விசாரணையில், ​​குழந்தையை கிணற்றில் வீசி தாயே கொன்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கமைய சந்தேகத்தின் பேரில், ராகம – ஹலந்துருவ வீதியில் வசிக்கும் 30 வயதுடைய குழந்தையின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here