காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையேயான கப்பல் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகளுக்காக விசேட சலுகைகள் வழங்கப்பட உள்ளதாக சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, நல்லூர் திருவிழாவை முன்னிட்டு பயணிகள் நலனைக் கருத்தில் கொண்டு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாகவும், அவை குறித்த விரிவான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும், சிவகங்கை கப்பல் சேவை வழமை போல் செவ்வாய்கிழமை தவிர்ந்த ஏனைய ஆறு நாட்களிலும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here