பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கில் கிரிக்கெட் வீரர் யாஷ் தயாளை கைதுசெய்ய அலகாபாத் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அண்மையில் உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் யாஷ் தயாள் மீது திருமண மோசடி குற்றச்சாட்டை அளித்திருந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக கிரிக்கெட் வீரருடன் உறவில் இருந்ததாகவும் உடலரீதியாகவும் சுரண்டப்பட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணை முடிவில் நீதிபதிகள் கிரிக்கெட் வீரர் யாஷ் தயாளைக் கைதுசெய்யத் தடை விதித்தனர்.








