அதிவேக நெடுஞ்சாலைகளில் மணித்தியாலத்திற்கு 120 கிலோமீற்றருக்கும் அதிக வேகத்தில் வாகனங்களை இயக்குபவர்கள், GovPay செயலியின் மூலம் அபராதம் செலுத்தினாலும், நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என காவல்துறை போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதி காவல்துறை மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலைகளில் அதிகபட்ச வேக வரம்பை மீறுபவர்களுக்கான திருத்தப்பட்ட அபராத தொகைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதன்படி,
- 100–120 கிமீ/மணித்தியாலய வேகத்தில் செலுத்தினால் ரூ.3,000 அபராதம்,
- 120–130 கிமீ/மணித்தியாலய வேகத்தில் : ரூ.5,000,
- 130–140 கிமீ/மணித்தியாலய: ரூ.10,000,
- 140–150 கிமீ/மணித்தியாலய: ரூ.15,000 அபராதம் விதிக்கப்படும்.
மணித்தியாலத்திற்கு 150 கிமீ-ஐ மீறும் வேகத்தில் வாகனம் செலுத்துவோருக்கு நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அந்த வகையில் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.








