ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை, இன்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட உள்ளது.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் பதவி, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு இடையூறாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக் கோவையின் 6ஆம் பிரிவு, உறுப்பினர்கள் தமக்கு ஒப்படைக்கப்பட்ட நம்பிக்கைக்கு இணங்க செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறது. மேலும் 9ஆம் பிரிவு, மனசாட்சிப்படி நடத்தி, மக்களின் நம்பிக்கையும் மதிப்பையும் உயர்த்த வேண்டும் என குறிப்பிடுகிறது.

இந்த விதிகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறி, பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணையை கொண்டு வர தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here