திருமண வயதுடைய இளைஞர்கள் மற்றும் பெண்கள் திருமணத்திற்கு முன் முழு இரத்தப் பரிசோதனை (Full Blood Count test) மேற்கொள்ள வேண்டும் என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் (தொற்றுநோய்கள் அல்லாத நோய்கள்) சம்பிகா விக்ரமசிங்க தெரிவித்தார்.
தலசீமியா மரபணு ரீதியாக பரவும் நோய் என்பதால், நோயாளிகள் ஒரே வகை மரபணு கொண்டவர்களுடன் திருமணம் செய்ய தவிர்த்தால், இலங்கையிலிருந்து இந்த நோயை முற்றிலும் ஒழிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் தற்போது சுமார் 2,000 தலசீமியா நோயாளிகள் உள்ளனர். ஆண்டுதோறும் சுமார் 60 குழந்தைகள் தலசீமியாவுடன் பிறக்கின்றனர். ஒவ்வொரு நோயாளியின் சிகிச்சைக்கு ஆண்டுக்கு ரூ.10 மில்லியனுக்கும் மேல் செலவாகும் என்றும், மாற்று அறுவை சிகிச்சைகளில் ரூ.40 மில்லியனுக்கும் மேல் செலவாகும் எனவும் அவர் தெரிவித்தார்.







