உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள பதுளை, துங்ஹிந்த நீர்வீழ்ச்சி வளாகத்தில் புதிய பார்வை மையம் ஒன்றை அமைக்கும் திட்டம் இன்று (27) அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
தற்போது சேதமடைந்த நிலையில் உள்ள, 50 வருடங்களுக்கும் மேற்பட்ட பழமையான பார்வை மேடைக்கு பதிலாக இந்த புதிய மையம் அமைக்கப்படவுள்ளது.
இதற்காக 20 மில்லியன் நிதியை ஊவா மாகாண சுற்றுலா அமைச்சு ஒதுக்கியுள்ளது.
இதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு உயர் தரமான பார்வை அனுபவத்தையும், தேவையான உட்கட்டமைப்பு வசதிகளையும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.







