நீதிபதிகளின் ஓய்வு வயதை 2 வருடங்களால் நீடிக்கும் சர்ச்சைக்குரிய திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு சட்டத்துறையின் சிரேஷ்ட உறுப்பினர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) மற்றும் எதிர்க்கட்சிகள் ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்த மாற்றத்திற்கு அரசியலமைப்பு திருத்தம் தேவைப்படுவதால், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாகும்.

தற்போது அரசாங்கம் அந்த தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here