அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (25) முதல் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பை கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் வழங்கப்பட்ட எழுத்து மூல உறுதியை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சங்கம் தெரிவித்துள்ளது.
வைத்தியர்கள் இடமாற்றம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, இன்று காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.







