இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பின்படி, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை வரும் ஒக்டோபர் 9 ஆம் திகதி வரை இணையவழி ஊடாக சமர்ப்பிக்க முடியும்.

மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கவனிக்க வேண்டியது, விண்ணப்பங்களை குறிப்பிட்ட கால எல்லைக்குள் சரியாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என்பதே ஆகும். காலக்கெடு கடந்த பின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here