அவுஸ்திரேலிய அரசு புதிய சட்டத்தை கொண்டு 2025 டிசம்பர் 10 முதல் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடக கணக்குகளைப் பயன்படுத்துவதை தடை செய்யவுள்ளது.
இந்த சட்டம் அமுலுக்கு வரும் பிறகு, டிக்டொக், பேஸ்புக், ஸ்னெப்சட், எக்ஸ் (முன்பு ட்விட்டர்), இன்ஸ்டாகிராம் போன்ற பிரபல சமூக ஊடக தளங்களில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பதிவு செய்வதும், பயன்படுத்துவதும் இயலாது.
கடந்த ஆண்டு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடக தடையை முன்மொழிந்து, அவுஸ்திரேலியா உலகில் இதுவே முதல் நாடாக இருக்கிறது எனவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.








