இராகலை – நுவரெலியா பிரதான வீதியில் உள்ள ஹாவா – எலிய காட்டுச் சந்தியில் நேற்று (செப்டம்பர் 21) இரவு, அதிவேகமாக வந்த ஒரு பாரவூர்தி ஊந்துருளியில் பயணம் மேற்கொண்ட இளைஞருடன் மோதியதில், உந்துருளி ஓட்டுநர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் ஹாவா – எலிய பகுதியில் வசிக்கும் மானெத் அபூர்வா என அறியப்படுகிறார்.
நுவரெலியா நகரத்திற்குள் நுழைவதற்காக காட்டுச் சந்தியிலிருந்து செல்லும் போது, இராகலை நோக்கி அதிவேகமாக வந்த பாரவூர்தி வண்டி, மானெத் அபூர்வா ஓட்டிய ஊந்துருளி வண்டியுடன் மோதியது.
பாரவூர்தியின் ஓட்டுநர் சந்தேகத்தின் பேரில் நுவரெலியா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தகவல்கள் படி, இந்த விபத்தில் உயிரிழந்த இளைஞனின் 21வது பிறந்தநாள் இன்று (செப்டம்பர் 22) என்பதும் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.








