சமீபத்திய ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, போர்த்துகல் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் நிகர மதிப்பு 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.
இதன் மூலம், பில்லியனர் அந்தஸ்தை அடைந்த முதல் கால்பந்து வீரராக அவர் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
40 வயதான ரொனால்டோவின் இந்த நிதி உயர்வு, கடந்த ஜூன் மாதம் சவுதி அரேபிய அணியான அல்-நாசர் உடன் 400 மில்லியன் டொலருக்கும் அதிகமான மதிப்புள்ள புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டதாக அறியப்படுகிறது.








