25 வயதுக்கு மேற்பட்ட நால்வரில் ஒருவர், தமது வாழ்நாளில் குறைந்தது ஒருமுறை பாரிசவாத (Stroke) நோயால் பாதிக்கப்படக்கூடும் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
களுத்துறை போதனா மருத்துவமனையின் நரம்பியல் வைத்திய நிபுணர் டாக்டர் சுரங்கி சோமரத்ன தெரிவித்ததாவது,
“பாரிசவாத நோயாளிகளில் சுமார் 30% பேர் 20 முதல் 60 வயது வரையிலானவர்கள் ஆவர்,” என்றார்.
அவர் இந்த கருத்தை, வரும் அக்டோபர் 29ஆம் திகதி அனுசரிக்கப்படும் உலக பாரிசவாத தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
டாக்டர் சுரங்கி சோமரத்ன மேலும் கூறியதாவது:
“இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கு தினமும் குறைந்தபட்சம் சிறிது நேரமாவது உடற்பயிற்சி செய்வது மிக அவசியம்.நடைபயிற்சி, உடல் உழைப்பு தேவைப்படும் விளையாட்டுகள், நீச்சல் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்றவை மிகச் சிறந்தவை.”என குறிப்பிட்டார்.








