அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை (MRP) விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்ற உணவகம் ஒன்றுக்கு, மாலிககந்த நீதவான் நீதிமன்றம் இன்று (29) 500,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

கொழும்பு 04-இல் காணப்படும் வணிக வளாகத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றுக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) நடத்திய சோதனையைத் தொடர்ந்து இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளரை போன்று சென்ற அதிகாரி 500 மி.லி. தண்ணீர் போத்தலை கொள்வனவு செய்த நிலையில் அவரிடம் இருந்து நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 80 ரூபாய் மேலதிகமாக அரவிடப்பட்டுள்ளது.

ரசீது உள்ளிட்ட ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதோடு குறித்த நிறுவனம் விதிமீறலை ஒப்புக்கொண்டுள்ளது.

ஒரு நிறுவனம் எந்த இடத்தில் அமைய பெற்றிருந்தாலும், அச்சிடப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு பொருட்களை விற்க வணிகங்களுக்கு அனுமதி இல்லை என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை நுகர்வோருக்கு நினைவூட்டியுள்ளது.

மேலும் பொதுமக்கள் விலைகளை கவனமாக சரிபார்த்து, ரசீதுகளுடன் பெறுமாறும் விதிமீறல்கள் தொடர்பில் புகாரளிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here