மத்திய , சப்ரகமுவ, மேல் மற்றும்வடமேல் மாகாணங்களில்இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
வட மாகாணத்திலும் அத்துடன்அனுராதபுரம் மாவட்டத்திலும்சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்குசரிவுகளிலும், மத்திய, சப்ரகமுவ, மேல்,தென், வடமத்திய, வடமேல் மற்றும்வட மாகாணங்களிலும் அத்துடன்திருகோணமலை மற்றும் மட்டக்களப்புமாவட்டங்களிலும்மணித்தியாலத்திற்கு சுமார் 50 – 60 kmவேகத்தில் அடிக்கடி பலத்த காற்றுவீசக் கூடும் என சிரேஸ்ட வானிலைஅதிகாரி மொஹமட் சாலிஹீன்தெரிவித்துள்ளார்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும்ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில்அவதானத்துடன் செயற்படுமாறுபொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மொன்தாசூறாவளியானதுஇலங்கைக்கு வடகிழக்காக வங்காளவிரிகுடாவின் கடபலமிக்கசூறாவளில் பிராந்தியத்திற்குமேலாக முல்லைத்தீவில் இருந்து சுமார்600 km தொலைவில்நிலைகொண்டிருப்பதை இன்று காலை2.30 மணியளவில் அவதானிக்கப்பட்டது.
இது மேலும் தீவிரமடைந்து யாக வடக்கு – வடமேற்குத்திசையை அண்மித்து நகர்ந்துசெல்வதுடன் இன்று மாலை அல்லதுஇரவு வேளையில் ஆந்திரப்பிரதேசத்தின் கரையை ஊடறுக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
காங்கேசன்துறை தொடக்கம்திருகோணமலை ஊடாக மட்டக்களப்புவரையான கரையோரத்திற்கு அப்பால்உள்ள கடல் பிராந்தியங்களுக்குசெல்லும் மீனவர்களும் கடல்சார்ஊழியர்களும் அடுத்துவரும் 24மணித்தியாலங்களுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர்.
சிலாபம் தொடக்கம் மன்னார் ஊடாககாங்கேசன்துறை வரையான அத்துடன்காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டைஊடாக பொத்துவில் வரையான கடலபிராந்தியங்களுக்கு செல்லும்மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும்அவதானத்துடன் செயற்படுமாறுகேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
திருகோணமலை தொடக்கம்காங்கேசன்துறை, மன்னார், கொழும்புஊடாக காலி வரையான கடல்பிராந்தியங்களின் பல இடங்களில்மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில்மணித்தியாலத்திற்கு 30 – 40 kmவேகத்தில் மேற்குத் திசையில் இருந்துகாற்று வீசும்.
காங்கேசன்துறை தொடக்கம்திருகோணமலை ஊடாக மட்டக்களப்புவரையான கடல் பிராந்தியங்களில்மணித்தியாலத்திற்கு 65 kmவேகத்தில் அடிக்கடி காற்றுஅதிகரித்து வீசக் கூடும்.
இவ்வாறானசந்தர்ப்பங்களில் இக் கடல்பிராந்தியங்கள் கொந்தளிப்பாக்காணப்படும்.
நாட்டை சூழ உள்ள ஏனைய கடல்பிராந்தியங்கள் இடைக்கிடையேகொந்தளிப்பாகக் காணப்படும்.
ஆனால் இடியுடன் கூடிய மழைபெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்தகாற்று வீசுவதுடன் அவ்வேளைகளில்கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாகமிகவும் கொந்தளிப்பான நிலையில்காணப்படும்.








