இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று (26) களனி சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் நடத்திய சோதனையில், நீர்கொழும்பு போலவலான மடமா வீதியில் உள்ள வீடொன்றிலிருந்து 2 இலட்சம் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இச்சோதனை நடவடிக்கை இராணுவ புலனாய்வு மற்றும் அதிரடிப்படை இணைந்து மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்து, மேலதிக விசாரணைகளுக்காக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைத்துள்ளனர்.








