வர்த்தக நிலையங்களில் பொருட்களை வாங்கும் போது, இனிமேல் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக ஷொப்பிங் பைகள் வழங்கப்படாது என்று நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை (அக்டோபர் 31) முதல், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ஷொப்பிங் பைகளின் விலை பொருட்களின் விலைப்பட்டியலில் இணைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதற்கான அதிகாரப்பூர்வ வர்த்தமானியும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது என அந்த அதிகார சபை கூறியுள்ளது.
இதன்படி, பொலித்தீன் பைகள் மற்றும் ஷொப்பிங் பைகளுக்கு கட்டாயமாக பணம் வசூலிக்கப்பட வேண்டும் என்பதும் நாளை முதல் நடைமுறைக்கு வரும் என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.








