வரலாற்று சிறப்புமிக்க இலங்கை–சவுதி அரேபியா கூட்டு வணிக கவுன்சில் நேற்று (11) ரியாத்தில் உள்ள சவுதி சம்மேளனங்களின் கூட்டமைப்பு (FSC) தலைமையகத்தில் தொடங்கப்பட்டது.

இது, சவுதி சம்மேளனங்களின் கூட்டமைப்பு (FSC) மற்றும் இலங்கை வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் (FCCISL) ஆகியவற்றுக்கிடையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) மூலம் நிறுவப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் தனியார் துறை ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துவதாகும்.

இது, இரு நாடுகளுக்கிடையேயான முதல் B2B மன்றம் எனக் குறிப்பிடப்படுகிறது.

கையொப்ப நிகழ்வில் கலந்து கொண்ட இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், இலங்கையின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து உரையாற்றினார்.

நிகழ்வில் மெய்நிகர் முறையில் கலந்து கொண்ட சவுதி சம்மேளனங்களின் தலைவர் ஹசன் அல்-ஹுவைசி மற்றும் இலங்கை FCCISL தலைவர் கீர்த்தி குணவர்தன ஆகியோர் MoU-வில் கையெழுத்திட்டனர்.

கையொப்பத்திற்குப் பிறகு, இலங்கையின் சவுதி தூதர் அமீர் அஜ்வத் மற்றும் ஹசன் அல்-ஹுவைசி ஆகியோர் ஆவணங்களை பரிமாறிக் கொண்டனர். இது, இருதரப்பு வர்த்தக உறவுகளில் ஒரு புதிய மைல்கல்லாக மதிக்கப்படுகிறது.

அமைச்சர் விஜித ஹேரத்தின் கூற்றுப்படி, புதிய வணிக கவுன்சில் இரு நாடுகளின் தனியார் துறைகளுக்கிடையிலான நெருக்கமான ஒத்துழைப்பிற்கான ஊக்கியாக செயல்பட்டு, பரஸ்பர பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கும்.என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here