கிளிநொச்சியில் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஏ9 வீதியின் தட்டுவன்-கொட்டி பகுதியில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடத்திலே இனங்காணப்படாத நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here