அரசாங்கத்தை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் வரும் நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் ஒன்றுகூடி, அரசாங்கத்திற்கு எதிராக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

அரசாங்கம் விவசாயிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும், இதனால் உருளைக்கிழங்கு, பூசணி மற்றும் வெங்காய விவசாயிகள் அரசாங்கத்தின் மீது அதிருப்தி தெரிவித்து வருகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

“அரசாங்கம் பட்டதாரிகளுக்கும் பெரிய அநீதி செய்துள்ளது. மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. பொய்யான குற்றச்சாட்டுகள் மூலம் எங்களை பயமுறுத்த முடியாது. அரசாங்கத்தின் பொய்யான வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்ட அனைவரும் 21ஆம் திகதி நுகேகொடையில் எங்களுடன் சேர்ந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்” என நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here