Sunday, April 19, 2026
No menu items!

விவசாயி

நெல் விவசாயிகளுக்கு உர மானியத்தின் நிலையான விலையை நிலைப்படுத்த வேண்டும்; கே.டி. லால்காந்த!

விவசாய, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, உலக சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு நெல் விவசாயிகளுக்கான உர மானிய விலையை நிலைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் விவசாயிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர், நெல் பயிர்செய்கை தொடர்பில் திட்டவட்டமான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து விவசாயிகளையும் பாதுகாத்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே அரசாங்கத்தின்...

நவம்பர் 21 அன்று நுகேகொடையில் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைய அழைப்பு – நாமல் ராஜபக்ஷ அறிவிப்பு!

அரசாங்கத்தை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் வரும் நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் ஒன்றுகூடி, அரசாங்கத்திற்கு எதிராக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அரசாங்கம்...

15,000 மெட்ரிக்தொன் யூரியா உரம் அரச உரக் கம்பனிக்கு வழங்க அமைச்சரவைக் அங்கீகாரம்!

விவசாயிகளுக்கான யூரியா உரத்தை நேரடி மற்றும் கலவையாக சந்தைக்கு விநியோகிப்பதற்காக, 15,000 மெட்ரிக்தொன் யூரியா உரத்தை அரச உரக் கம்பனி லிமிட்டெட் இற்கு வழங்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயெ அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayathissa) இதனை தெரிவித்துள்ளார். இத்திட்டம் சர்வதேச போட்டி விலைமுறை அடிப்படையில் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக...

இஞ்சி மற்றும் மஞ்சள் பயிர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம்!

இலங்கையில் வணிக ரீதியாகவும், ஏற்றுமதி நோக்கங்களுக்காகவும் பெருமளவில் பயிரிடப்படும் இஞ்சி மற்றும் மஞ்சள் பயிர்செய்கைகளுக்காக சிறப்பு காப்பீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இதற்கான நடவடிக்கைகள் விவசாய அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், இயற்கை பேரழிவுகள், நோய் தாக்கங்கள், பூச்சி சேதங்கள் மற்றும் காட்டு யானை தாக்கங்களினால் ஏற்படும் இழப்புகளுக்காக விவசாயிகள் இழப்பீடு பெறலாம். குறிப்பாக, இஞ்சி...

2025 ஆம் ஆண்டுக்கான சிறுபோகத்திற்கான அரசின் நெற் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டம்!

2025 சிறுபோகத்திற்கான அரசின்  நெற் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்திற்காக 6,000 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நேற்று (2025.09.15) அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 5,288 மில்லியன்கள் ஏற்கனவே செலவிடப்பட்டு நெல் சந்தைப்படுத்தல் சபையால் 16 மாவட்டங்களில் 43,891 மெற்றிக்தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும் தற்போது அறுவடை இடம்பெற்று வரும் பொலன்னறுவை, அநுராதபுரம் மற்றும்...

விவசாயிகளுக்கான உர மானியத்தில் டிஜிட்டல் முறை – அமைச்சரவை ஒப்புதல்!

விவசாயிகளுக்கான உரமானியத்திற்கு டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்கம் விவசாயிகளுக்கு உரமானியத்தை வழங்கும் போது அந்தந்த விவசாயிகளுக்கு குறித்த மானியத்தை சரியான நேரத்தில் கிடைக்கின்றமையையும், குறித்த நிதியுதவியை தமது விவசாய நடவடிக்கைகளுக்கான உரத்தேவைக்காக முழுமையாகப் பயன்படுத்துகின்றமையையும் உறுதிப்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதனால், குறித்த பின்னூட்டல் செயற்பாட்டுக்கு வசதியளித்து விவசாயிகளுக்கு உர விநியோகத்தை மிகவும்...

நெல் விலை நிர்ணயம் – விவசாயிகள் போராட்டம் தேவையில்லை: நாமல் கருணாரத்ன!

நெல் கொள்வனவு உள்ளிட்ட பல பிரச்சினைகள் தற்போது விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளதாக விவசாய பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார். மொனராகலையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அவர், நெல் களஞ்சியசாலைகளில் உள்ள நெல் விடுவிக்கப்படும் என்றும், நெல்லுக்கான உரிய விலை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். பெரும்போகத்தில் விவசாயிகளுக்கான அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்பதால், போராட்டம் நடத்த வேண்டிய அவசியமில்லை...

உரங்களை பதுக்கும் தொழிலாளர்களுக்கு கடும் நடவடிக்கை –நாமல் கருணாரத்ன எச்சரிக்கை!

விவசாயிகளுக்கு உரம் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு நேரடியாக பதிலளித்த விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, உரங்களை சட்டவிரோதமாக பதுக்கி வைப்பவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், அவர்களின் உர விநியோக உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்தார். குருநாகலில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அரலகங்வில -...

சிறுபோக செய்கைக்காக அரசாங்கம் வழங்கிய 190 மில்லியன் ரூபா..!

கிளிநொச்சி மாவட்டத்தில் 2025ம் ஆண்டு சிறுபோக செய்கைக்காக இதுவரை 6200 விவசாயிகளுக்கு 7600 ஏக்கர் நிலப்பரப்புக்காக 190 மில்லியன் ரூபா வைப்பில் இடப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்கதிபர் எஸ்-முரளிதரன் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்தின் சிறுபோக செய்கை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் 2025ம் ஆண்டு சிறுபோக செய்கையாக 10800...

வேளாண்மைக்கு நீர் பாய்ச்ச சென்ற விவசாயி மீது யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு!

வவுணதீவு, பாலைக்காடு வயல் பிரதேசத்தில் வேளாண்மைக்கு நீர் பாய்ச்ச சென்ற விவசாயி ஒருவர் யானை தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் நேற்று (01) இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர். நாவற்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய வைரமுத்து மகாலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த விவசாயி வழமைபோல வேளாண்மைக்கு நீர் பாய்ச்சுவதற்காக சம்பவதினம் இரவு சென்றவர் காலை வரையில்...
- Advertisement -spot_img

Latest News

வீட்டில் தீ வைப்பு; உயிரிழப்புக்கள் அதிகரிப்பு

மகரகமையில் உள்ள இரண்டு மாடி கொண்ட வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்றாவது நபரும் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அந்த வீட்டின்...
- Advertisement -spot_img