யாழ்ப்பாணம், அச்செழு பகுதியில் 56 வயதுடைய ஒரு குடும்பஸ்தர் கள்ளுத்தவறணையில் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

இவர் நான்கு பிள்ளைகளின் தந்தையாவர்.

நேற்று (20) மாலை, புன்னாலை கட்டுவனில் உள்ள கள்ளுத்தவறணைக்கு கள்ளு அருந்தச் சென்ற அவர், அங்கு கள்ளு அருந்திக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்களால் கடுமையாக தாக்கப்பட்டார்.

முதலில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதிலும் உயிரிழந்தார்.

இச்சம்பவத்தைப் பொறுத்து சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here