மின்சார சபை மறுசீரமைப்பின் மூலம் உச்ச பயன் நாட்டு மக்களுக்கு நேரடியாக வழங்கப்படும் என்று வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி உறுதியளித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (20) நடைபெற்ற வலுசக்தி அமைச்சுக்கான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
மின்சார சபையின் பணிகள் மற்றும் பொறுப்புகள் முழுமையாக அரச அங்கீகாரம் பெற்ற நான்கு நிறுவனங்களுக்கு கையளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அடுத்து, இந்த மறுசீரமைப்பு அடுத்த ஆண்டில் முதல் முறையாக செயல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் திருகோணமலை எண்ணெய் தாங்கிகளின் நிலவரத்தையும் அவர் விளக்கியுள்ளார்:
- 24 தாங்கிகள் இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்தின் பராமரிப்பில் உள்ளன.
- 14 தாங்கிகள் இந்தியாவின் ஐ.ஓ.சி நிறுவனத்தின் பராமரிப்பில் உள்ளன. என அவர் குறிப்பிட்டார்.
மேலும் அமுல்படுத்தப்பட்ட மறுசீரமைப்பின் மூலம் மின்சார சேவைகள் மக்கள் நலனுக்கேற்றவாறு வழங்கப்படும் என்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.








