இன்றைய தினம் 22.ம் திகதி december 2025ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவக்கூடும். மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும், வடமேல் மாகாணத்திலும், அம்பாறை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் வானிலை குறித்து பல்கலைக்கலக விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா கூறுகையில்
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கு திசையில் உருவாகிய காற்றுச் சுழற்சி தற்போது மாலைதீவுகளுக்கு அருகே நிலை கொண்டுள்ளது எனவும்.
இதனால் கிழக்கு, ஊவா, சப்ரகமுவ, மத்திய, மற்றும் தென் மாகாணங்களுக்கு கிடைத்து வரும் மழை இன்று(22ம் திகதி December 2025) இரவு முதல் படிப்படியாக குறைவடையும் வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில் எதிர்வரும் 28.ம் திகதி December 2025 அன்று வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கே புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது என்றும்.
இதன் காரணமாக மீண்டும் எதிர்வரும் 28ம் திகதி December 2025 முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மழை கிடைக்க தொடங்கும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் இந்த மழை எதிர்வரும் 07ம் திகதி January 2026 வரை தொடரும் வாய்ப்புள்ளது. ஆனால் இடையில் ஒரு சில நாட்கள் மழையற்ற நாட்களாக அமையும் எனவும் கூறியுள்ளார்.
அதேவேளை எதிர்வரும் 31.ம் திகதி december.2025 முதல் மத்திய, ஊவா, வடமத்திய, தெற்கு, சப்ரகமுவ மாகாணங்களுக்கு மழை கிடைக்க தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இப்பிரதேசங்களுக்கும் மழை எதிர்வரும் 07.ம் திகதி January .2026 வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் எதிர்வரும் 10 ,ம் திகதி January 2026 முதல் 13.ம் திகதின் January 2026 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவலாக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது எனவும் கூறியுள்ளார்.
எதிர்வரும் 2026 ஜனவரி மாதத்தின் பெரும்பாலன நாட்கள் மழை நாட்களாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் குளிரான வானிலை எதிர்வரும் 26.12.2025 முதல் குறைவடையும் சாத்தியமுள்ளது.
இதனால் விவசாயிகள் இந்த நாட்களைக் கருத்தில் கொண்டு தமது விவசாய நடவடிக்கைகளைத் திட்டமிடுவது சிறப்பானது என்றும்.
இது ஒரு நீண்ட கால வானிலை முன்னறிவிப்பு என்பதனால் இதில் சில மாற்றங்கள் நிகழக்கூடும் என்பதையும் கருத்தில் கொள்ளுமாறு கூறியுள்ளார் பல்கலைக்கலக விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.








