ஹோர்முஸ் நீரிணையிலிருந்து கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளித்து வெளியேற்றும் கடற்படை திட்டத்தை டிரம்ப் இடைநிறுத்தியதை தொடர்ந்து இரண்டாவது நாளாக மசகெண்ணை விலை குறைவடைந்துள்ளது.
இந்தச் செய்தி, சமாதான ஒப்பந்தம் உருவாகக்கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 107 டொலருக்கு குறைவாகவும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) விலை 100 டொலருக்கு குறைவாகவும் சரிந்தது.
தற்பொழுது பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பெரலுக்கு 106.50 டொலராகவும், WTI ஒரு பெரலுக்கு 98.55 டொலராகவும் விற்பனை செய்யப்படுகிறது.
குறித்த தடை முழு வீச்சில் தொடரும் அதே வேளையில், ஒப்பந்தத்தை எட்டும் நோக்கில், ‘புராஜெக்ட் ஃப்ரீடம்’ (அமெரிக்க கடற்படை திட்டம்) குறுகிய காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்க இரு நாடுகளும் ஏற்று கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.








