தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார்.

அவரைத்தொடர்ந்து அமைச்சர்களாக என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார். ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து முக்கிய கோப்புகளில் முதல்-அமைச்சர் விஜய் கையெழுத்திட்டார். அதன்படி இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்கள் இலவசம் என்ற முதல் கோப்பில் கையெழுத்திட்டார் முதல்-அமைச்சர் விஜய்.

பின்னர் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்குவதற்கான கோப்பிலும், மாவட்ட வாரியாக போதைப்பொருள் தடுப்புப்படை பிரிவு கோப்பிலும் விஜய் கையெழுத்திட்டார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here