நாடு முழுவதும் நிலவும் மோசமான வானிலையைத் தொடர்ந்து,தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) ஐந்து மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கைகள் இன்று (11) இரவு 9.00 மணி வரை அமுலில் இருக்கும் என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பதுளை மாவட்டத்தில் உள்ள பசறை, குருநாகல் மாவட்டத்தில் உள்ள ரிதிகம, மாத்தளை மாவட்டத்தில் உள்ள நௌலா, அம்பங்கங்க கோரளை மற்றும் ரத்தோட்டை, மொனராகலை மாவட்டத்தில் உள்ள பாதல்கும்புர மற்றும் வெல்லவாய, மற்றும் இரத்தினபுர மாவட்டத்தில் உள்ள கொடகவெல ஆகிய பகுதிகளுக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள், சாத்தியமான நிலச்சரிவு அபாயங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தி, அபாய நிலை 1-இன் கீழ் இந்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here