பல மாதங்களுக்கு பின்னர் இன்று (11) மீண்டும் இயக்கப்பட்ட, கோட்டைக்கும், யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான யாழ்தேவி இரயில் சேவையில் பயணிப்பதற்கான இருக்கைகளை இப்போது இணையம் மூலம் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சேவை வரையறுக்கப்பட்ட கால அட்டவணையின் கீழ் செயல்படுத்தப்படும் என இலங்கை இரயில்வே திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கான இரயில் சேவை திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 6:40 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2:33 மணிக்கு வந்தடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே நேரம் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு திரும்பும் பயணம் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10:30 மணிக்கு ஆரம்பித்து மாலை 7:03 மணிக்கு நிறைவடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

seatreservation.railway.gov.lk என்ற அதிகாரப்பூர்வ முன்பதிவு இணையதளம் மூலம் பயணிகள் இருக்கைகளை முன்பதிவு செய்யலாம் என்று இலங்கை இரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here