முதலமைச்சராகப் பதவியேற்ற சி.ஜோசப் விஜய்க்கு இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்த நிலையில் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.

X தள பதிவின் ஊடாக, இலங்கை ஜனாதிபதி தெரிவித்த வாழ்த்துகளால் தாம் “மிகுந்த பெருமை” அடைவதாகவும், இந்த “கனிவான செயலுக்காக” அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் விஜய் கூறியுள்ளார்.

ஜனாதிபதி திசாநாயக்க, தனது வாழ்த்துச் செய்தியில், இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையிலான நீண்டகால வரலாற்று, கலாச்சார மற்றும் மக்கள்-மக்களுக்கு இடையேயான உறவுகளை எடுத்துரைத்தார்.

ஜனாதிபதி திசாநாயக்க, விஜய் மற்றும் தமிழக மக்கள் வெற்றிபெற வாழ்த்தியதோடு, “பெரும் செழிப்பு மற்றும் முன்னேற்றத்தை” நோக்கி செல்லும் இந்த பயணத்தில் இணைந்து செயல்படுவதற்கான நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here