தாய்லாந்திலிருந்து குஷ் மற்றும் ஹாஷ் போதைப்பொருட்களைக் கடத்தியமை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 23 பிக்குகளை, எதிர்வரும் மே 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதவான் சுபானி அபேசேகர இன்று உத்தரவிட்டார்.
தாய்லாந்திலிருந்து ஏப்ரல் 25 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சந்தேகநபர்களின் பயணப் பைகளில் 112 கிலோகிராம் குஷ் மற்றும் ஹாஷ் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த நடவடிக்கையை அமிதானந்தா என்ற பிக்கு ஏற்பாடு செய்ததாகக் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. பின்னர் அவர் கம்பஹா பகுதியில் உள்ள ஒரு வழிபாட்டுத்தளத்தில் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டார் என தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக சந்தேக நபர்கள் 23 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டதோடு இன்று மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.








