பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கை பயணிகள் இருவரிடம் இருந்து 14.562 கிலோ குஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட குறித்த குஷ் போதைப்பொருளின் சந்தை மதிப்பு ரூ.140.56 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த இரு பயணிகளும் நேற்று காலை பேங்கொக்கிலிருந்து வந்துள்ளனர் எனவும் 23 மற்றும் 30 வயதுடையவர்கள் என்றும், கொழும்பில் உள்ள தெமட்டகொடையைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
மேலதிக நடவடிக்கைக்காக சந்தேக நபர்கள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டனர் என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் அண்மைய காலமாக பேங்கொக்கிலிருந்து நாட்டுக்கு கடத்தப்படும் போதை பொருள் பெருமளவில் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றமையை குறிப்பிடத்தக்கது.








