ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிச்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா மற்றும் திரிஷா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தில், இசைஞானி இளையராஜா பாடல் ஒன்றுக்கான காப்புரிமைக்காக வழக்கு தொடர்வது போன்று ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது.

இந்த காட்சி சர்ச்சையான நிலையில் தயாரிப்பு நிறுவனம் அதற்கு விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக கருப்புப்பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,

கருப்பு திரைப்படத்தில் தங்கள் பெயரை பயன்படுத்தி வரும் காட்சி என்பது செய்தியை கடத்தும் நோக்கத்திற்காக கையாளப்பட்ட ஒரு தற்செயல் நிகழ்வாகும்.

50 ஆண்டுகளுக்கு மேலாக இசை உலகை ஆட்சி செய்யும் இசை அரசனை காயப்படுத்தும் எண்ணமோ களங்கப்படுத்தும் எண்ணமோ படக்குழுவிற்கு சிறிதளவும் இல்லை.

உள்நோக்கம் எதுவுமின்றி வைக்கப்பட்ட இந்த காட்சியினால் தாங்களோ தங்களை சார்ந்தவர்களோ அல்லது இசைஞானி ரசிகர்களோ மனம் புண்பட்டிருந்தால் அதற்கு எங்களின் தாழ்மையான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here